Monday, August 23, 2010

pillayaiyarai panivoom

                                                  பிள்ளையாரைப் பணிவோம்!
என்னோட இஷ்ட தெய்வம்  
ஸ்ரீ விநாயகர் எனக்கு அருள் புரியட்டும்
ஸ்ரீ ஆறுமுக பெருமான் எனக்கு அருள் புரியட்டும்
ஸ்ரீ மகேஸ்வரரும் எனக்கு மங்கலத்தை உண்டாக்கட்டும் 
ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் குடிகொண்டு 
யானை முகமும் நான்கு தோள்களும் 
பெருத்த தொந்தியும் வாய்தவரான
ஸ்ரீ விநாயக மூர்த்தியை நான் தொடங்கும் 
எல்லா காரியங்களிலும் எந்த வித 
விக்ஞங்களும் ஏற்படாமல் இருப்பதற்காக 
வணங்குகிறேன்!      
 மங்கல முகம் கொண்ட சுமுகர்
ஒற்றைக்  கொம்பை  கொண்ட ஏக தந்தர்
கபில நிறம் வாய்ந்த கபிலர்
யானை காதுகள் உடைய கஜகர்னர்
பெரும் வயிற்ரோடு கூடிய  லம்போதரர்
குள்ள தோற்றம் உடைய விகடர்
சகல விக்ஞங்களுக்கும் ராஜாவான விக்ஞராஜன்
எல்லா துன்பங்களையும் அழிக்கக்கூடிய விநாயகன்
நெருப்பை போல ஓளி வீசக்கூடிய தூமகேது 
பூத கணங்களுக்கு தலைவராகக்கூடிய கனாத்யக்க்ஷன் 
நெற்றியில் பிறை சந்திரனை சூடியவரான பாலச்சந்திரன்
யானை தோற்ற்றம் உள்ள கஜானனன்
வளைந்த துதிக்கை கொண்ட வக்ர துண்டார்   
முறம் போன்ற காதுகள் கொண்ட சூற்பகர்னர்
தம்மை வணங்கி நிற்கும் அடியவர்களுக்கு 
அருள் புரியும் ஹேரம்பர்
கந்த பெருமானுக்கு மூத்தவரான ஸ்கந்த பூர்வஜன்     
இவ்வாறு சொல்லப்படும் விநாயகப் பெருமானின்
பதினாறு திருநாமங்களையும் 
வித்தைகளை கற்கும் பொழதும்
வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுதும் 
போர் காலத்திலும் இன்னல்கள்  வந்த பொழுதும் 
யாராவது வாசித்தாலும் மனங்குளிர கேட்டாலும் 
அவர்களுக்கு எந்த வித துன்பங்களும் நேரிடாது!